
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நிதி அகர்வால். இவர் தமிழில் சிம்புவுடன் சேர்ந்து ஈஸ்வரன் மற்றும் நடிகர் ரவிமோகனுடன் சேர்ந்து பூமி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருக்கும் பவன் கல்யாணுடன் சேர்ந்து ஹரிஹர வீர மல்லு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் இது பற்றி நடிகை நிதி அகர்வால் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் பேசினார்.

அவர் பேசியதாவது, இந்த படத்தின் சவாலை சமாளிப்பதற்காக நான் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். இந்தப் படத்திற்காக நான் 5 வருஷங்களாக வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
பவன் கல்யாணுடன் சேர்ந்து நடித்தது என் வாழ்வின் மிகப்பெரிய அற்புத பரிசு. அவர் ஒரு மனிதநேயம் கொண்ட மனிதர் மற்றும் அற்புதமான நடிகர். தமிழில் ஒரு படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது எனவே விரைவில் தமிழ் படத்திலும் நடிக்க இருக்கிறேன் என்று கூறினார். மேலும் நடிகர் பிரபாஸ் தற்போது நடிக்கும் தி ராஜா ஷாப் என்ற திரைப்படத்தில் நடிகை நிதி அகர்வால் நடித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்