தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி ஒரு இயக்கத்தில் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் சம்யுக்தா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் தனுஷ் பாலமுருகன் என்னும் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், நடிகர்கள் சமுத்திரக்கனி, சாய்குமார், ஆடுகளம் நரேன், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் பிப்ரவரி 17-ஆம் தேதி ரிலீசான நிலையில் வாத்தி திரைப்படம் ரிலீசான 4 நாட்களில் 51 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளது. இந்த தகவலை படக்குழு போஸ்டர் வெளியிட்டு உறுதிப்படுத்தியது. வாத்தி படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால் இனி வருகிற நாட்களில் வசூலில் கோடிகளை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வாத்தி திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு தல காதல் தந்த என்ற பாடலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலில் தனுஷ் குரலின் வெர்ஷனை தற்போது பட குழு வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மேலும் ஒரு தல காதல தந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.