திருவான்மியூரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த நடிகர் டேனியல் பாலாஜிக்கு நேற்று இரவு ஒரு மணி அளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அவரை குடும்பத்தினர் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சற்று நேரத்திலேயே அங்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது..

ஓட்டேரி அரசு மின் மயானத்தில் இன்று அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ள இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.