லொள்ளு சபா நிகழ்ச்சி மூலமாக பிரபலமான நடிகர் சேஷூ உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். பத்து நாட்களுக்கு முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதயத்தில் மூன்று அடைப்புகள் இருந்ததால் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இவருடைய மறைவு ஒட்டுமொத்த திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.