
பிரபல நடிகரான சல்மான் கான் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு லாரன்ஸ் விஷ்ணு என்ற கும்பல் கொலை மிரட்டல் விடுத்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சல்மான் கான் வீட்டின் அருகே துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடைபெற்றது.
இதனால் சல்மான் கானுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 20ஆம் தேதி காலை இளம் பெண் ஒருவர் பாந்திராவில் உள்ள சல்மான்கான் வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்றுள்ளார். அத்துமீறி நுழைய முயன்ற இஷா சாம்ரா என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இஷா சாம்ராவை 14 நாட்கள் நீதிமன்ற சிறை காவலில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.