மந்திரமூர்த்தி இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடித்திருக்கும் படம் “அயோத்தி”. இப்படத்தில் குக் வித் கோமாளி புகழ், ப்ரீத்தி அஸ்ராணி, யாஷ்பால் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநாதன் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஒரு பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இப்படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி உள்ளதாக படக்குழு தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் “அயோத்தி” படத்திலிருந்து 2வது பாடலை படக்குழு வெளியிட்டு உள்ளது. இப்பாடல் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.