தமிழகத்தில் நிலவி வரும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கவலை தெரிவித்துள்ளார். சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த செய்திகள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த குழப்பமான சூழலைச் சீர் செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மக்களுக்கு எவ்வித தடையுமின்றி சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தவெக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேஸ் தட்டுப்பாட்டால் இல்லத்தரசிகள் தவித்து வரும் வேளையில், விஜய்யின் இந்த அறிக்கை அரசியல் களத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.