கர்நாடகாவில் 5, 8, 10 மற்றும் puc இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தற்போது பொது தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. புதிய கல்விக் கொள்கையின்படி இந்த தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பியூசி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் பொது தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக கல்வித்துறை ஏற்கனவே அறிவித்தது. இந்நிலையில் இந்த மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் பொது தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த தேர்வுகளின் மூலமாக மாணவர்களின் கல்வித்திறன் அதிகரிக்கும் எனவும் மாணவர்களின் மதிப்பெண்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு மட்டுமே தெரியும் விதமாக அறிவிக்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த மாணவர்களுக்கு பள்ளி மற்றும் அவர்களின் கல்லூரிகளிலேயே தேர்வுகள் நடத்தப்படும் என்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்களும், puc முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களும் மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.