நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) ராணிப்பேட்டை மாவட்ட வழக்கறிஞர் அணியின் இணை ஒருங்கிணைப்பாளராகப் பதவி வகித்த திரு. அஜய், அக்கட்சியில் இருந்து விலகி நாம் தமிழர் கட்சியில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் முன்னிலையில் அவர் முறையாகக் கட்சியில் இணைந்தார். அஜயுடன் சேர்த்து அவரது ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோரும் நாதகவில் இணைந்துள்ளனர். த.வெ.க.வில் உழைக்கும் நிர்வாகிகளுக்கு உரிய மரியாதை இல்லை என்றும், ஒருங்கிணைப்புக் குறைபாடுகள் இருப்பதாகவும், முக்கியமாக பல்வேறு மாவட்டங்களில் பொறுப்புகளுக்குப் பணம் வசூலிக்கப்படுவதாகக் கட்சி மீது ஏற்கெனவே இருக்கும் குற்றச்சாட்டுகளை வலுப்படுத்தும் விதமாகவே தாம் விலகியதாகவும் திரு. அஜய் குற்றம் சாட்டியுள்ளார்.