பாஜக உடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி வைத்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இந்த நிலையில், திடீர் திருப்பமாக த.மா.கா. விழுப்புரம் மாவட்ட இளைஞரணி தலைவர் JS. ஜெயராஜ் சி.வி.சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். இவர் காங்கிரசுக்கு செல்வார் என பேச்சு அடிப்பட்ட, அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளார்.