கேரள மாநிலத்தில் உள்ள அடிமாலியில் கிருபா எல்தோஸ்(21) என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் நான்காம் ஆண்டு நர்சிங் படிப்பு வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களாக மாணவிக்கு காய்ச்சல் இருந்தது. இதனால் கிருபா மருந்துகளை சாப்பிட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு தனது தோழியின் வீட்டில் கிருபா மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் அவரை காப்பாற்ற முடியவில்லை. மாரடைப்பு ஏற்பட்டு கிருபாவில் வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று கிருபாவின் உடல் கேரளாவில் இருக்கும் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடந்தது. .