விருதுநகர் மாவட்டம் முஷ்டகுறிச்சி பகுதியில் கடந்த 2-ஆம் தேதி சாக்கு மூட்டையில் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் நாகலேந்தல் பகுதியைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளியான முருகன் என்பது தெரியவந்தது.

முருகனின் உடலை பார்த்து மனைவி உறவினர்கள் என அனைவரும் கதறி அழுதனர். ஆனால் எந்தவித உணர்ச்சிகளும் இல்லாமல் அவரது மகன் தவமணி நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

அதாவது தவமணி அடிக்கடி செல்போன் உபயோகப்படுத்தியுள்ளார். மேலும் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறி தொந்தரவு அளித்துள்ளார். வீட்டில் இருக்கும் ஆடுகளை தந்தைக்கு தெரியாமல் விற்பனை செய்து மது குடித்து ஊர் சுற்றி திரிந்தார்.

இதனால் முருகன் தனது மகனை கண்டித்துள்ளார். தந்தை திட்டியதால் அவரை கொலை செய்ய திட்டமிட்ட தவமணி, இன்ஸ்டாகிராம் நண்பரான அபூபக்கர் என்பவருடன் இணைந்து முருகனை கொலை செய்து உடலை சாக்கு முட்டையில் கட்டி கிணற்றில் வீசியது தெரியவந்தது. இதனால் தவமணி, அபுபக்கர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.