மத்திய அரசு சார்பில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயன் பெறும் விதமாக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நலிவடைந்த மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருவது மட்டுமல்லாமல் அதன் மூலம் உதவித்தொகையும் வழங்கி வருகிறது. அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் இ- ஷ்ரம் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாக நலிவடைந்த தொழிலாளர்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்கள் உட்பட பிற தொழிலாளர்களுக்கு இ-ஷ்ரம் அட்டை மூலமாக அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் 2 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடும் வழங்கப்படுகின்றது. இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற ஆதார் அட்டை மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் நம்பர், வங்கி பாஸ் புக் ஆகியவை முக்கிய ஆவணங்களாகும். இந்த அட்டையை பெற விருப்பமுள்ளவர்கள் eshram.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் சென்ற விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் பதிவு செய்ய முடியாதவர்கள் அருகில் உள்ள இ சேவை மையம் அல்லது CSC மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.