கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 21 வயது இளைஞர் சச்சின், நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார். விழா முடிந்த பிறகு, அங்கிருந்த சிக்கன் கறியை மட்டும் எடுத்துக்கொண்டு மது குடிப்பதற்காக அருகே கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்திற்குச் சென்றுள்ளார். அங்கு மது அருந்திக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக சிக்கன் எலும்பு ஒன்று சச்சினின் தொண்டையில் சிக்கியுள்ளது.
எலும்பு தொண்டையில் சிக்கியதால் மூச்சுவிட முடியாமல் அவர் கடுமையாகத் திணறியுள்ளார். அந்த நேரத்தில் கட்டிடத்தில் வேறு யாரும் இல்லாததால், அவருக்கு உதவி செய்ய முடியாமல் போனது. இதனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மறுநாள் காலை வேலைக்கு வந்த தொழிலாளர்கள் சச்சின் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
