கிறிஸ்மஸ், அரையாண்டு, ஆங்கில புத்தாண்டு என தொடர் விடுமுறை வருகிறது. இதனால் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு ஏராளமான பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இந்த நிலையில் சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பிற பகுதிகள், சிங்கப்பூர், கோலாலம்பூர், தாய்லாந்து, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் விமானங்களுக்கான டிக்கெட் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
