இங்கிலாந்தின் வால்வர்ஹாம்டனில் ரயில் நிலையம் அருகே இரண்டு சீக்கிய ஆண்கள் மீது மூன்று இளைஞர்கள் இனவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 15ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தின் வீடியோவில், பாதிக்கப்பட்டவர்கள் தரையில் விழ, தாக்குதல் நடத்தியவர்கள் அடித்ததும், இழுத்துச் சென்றதும், அவர்களின் தலைப்பாகைகள் தரையில் கிடந்ததும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. சம்பவ இடத்தில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டபோதும், பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. சிரோமணி அகாலிதளத் தலைவர் சுக்பீர் சிங் பாதல், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்து, இங்கிலாந்து அரசிடம் இந்த பிரச்சினையை வலியுறுத்தி, அங்கு வசிக்கும் சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

“>

 

மேலும், பிரிட்டிஷ் போக்குவரத்து காவல்துறை, “இத்தகைய நடத்தையை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டோம், சம்பவத்தில் தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளது” என அறிவித்துள்ளது. அதேசமயம், உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுரீனா பிராக்கன்ரிட்ஜ் சம்பவத்தை கண்டித்து, வால்வர்ஹாம்டன் நகரின் பன்முகத்தன்மை, ஒற்றுமையை காக்க அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.