
சென்னையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிறந்தநிலை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 23ஆம் தேதி நிறைவு பெற்ற நிலையில் தற்போது இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தகுதியானவர்கள் பல்கலைக்கழகத்தில் இணையதளம் மூலமாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.