தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்த பிறகு, தவெக அரசு அறிவித்த பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்திற்கு எதிராக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கை, தற்போதைய அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது!

“தேனைத் தடவித் தேர்தல் வாக்குறுதி கொடுக்கும்போது வராத ரிசர்வ் வங்கி விதிமுறைகள், மக்களை ஏமாற்றி ஆட்சிப் பொறுப்பில் உட்கார்ந்த பிறகு எங்கே இருந்து திடுமெனக் குதித்து வருகின்றன? இது நிர்வாகத் திறமையின்மையா, இல்லை திட்டமிட்ட ஏமாற்று வேலையா?” என்று அவர் மிகக் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் நடைமுறை என்பது கடந்த 2025 நவம்பர் 28-லேயே வழங்கப்பட்டுவிட்டதைச் சுட்டிக்காட்டிய தங்கம் தென்னரசு, அந்த விதியை முழுமையாகத் தெரிந்து கொண்டுதானே, ‘5 ஏக்கருக்குள் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு முழு பயிர்க்கடன் தள்ளுபடி, அதற்கு மேல் உள்ளவர்களுக்கு 50% தள்ளுபடி’ என 2026 ஏப்ரல் 16-ல் தவெக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்தீர்கள் என வறுத்தெடுத்துள்ளார்.

இப்போது வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியைக் காரணம் காட்டி விவசாயிகளை ஏமாற்றுவது “பச்சை துரோகம்” என்று சாடியுள்ள அவர், தவெக அரசின் முதல் பட்ஜெட்டிலேயே விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று  டிமாண்ட் வைத்துள்ளார்.

“>