கோவையில் ஆர் பலூன் மூலமாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதாக பரப்பப்படும் வீடியோ போலியாக எடிட் செய்யப்பட்ட ஒன்று என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு நிலை குழு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோவை நகர பேருந்து நிலையத்தில் ஏர் பலூன் மூலமாக தேர்தல் பிரசாரம் செய்யப்படுவதாக பரப்பப்படும் காணொளி எடிட் செய்யப்பட்ட ஒன்றாகும். அந்தப் பகுதியில் ஏர் பலூன் எதுவும் பறக்க வில்லை என்று கோவை மாவட்ட ஆட்சியர் உறுதிப்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது.