தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானவை எனக் கூறி அவற்றை இரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.

கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திர திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. தேர்தல் பத்திரத் திட்டத்தை எதிர்த்த வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் தலைமையிலான 5 நீதிபதிகள்  கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது என உச்ச நீதிமன்ற ஐந்து நீதிபதிகள் அமர்வு ஒருமித்த தீர்ப்பை வழங்கி உள்ளது. உச்சநீதிமன்றம் கூறியதாவது, ஆர்டிஐ சட்டத்தை தேர்தல் பத்திரங்கள் மீறுவதாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் லஞ்சத்துக்கு வழிவகுக்கும். கருப்பு பணத்தை தடுக்க தேர்தல் பத்திரங்களை அனுமதிக்கிறோம் என்ற கருத்து ஏற்கத்தக்கதல்ல. ஒரு நபர், நிறுவனம் எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கலாம் என திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் மட்டுமே கருப்பு பணத்தை ஒழிக்க உதவாது. தேர்தல் பத்திரங்கள் தகவல் பெறும் உரிமை சட்டத்துக்கு எதிராக அமையும்.
நன்கொடை தருவர் குறித்த விவரங்களை தெரிவிக்க தேவை இல்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது, அதனால் ஏற்படும் ஆதாயங்களை கருத்தில் கொண்டு இருக்கலாம். தகவல் அறியும் உரிமை சட்டம் அரசியல் நன்கொடைகளுக்கும் நீட்டிக்கப்படுகிறது.

தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படை தன்மை இல்லை. அரசியல் கட்சிகளுக்கு யார் பணம் தருகிறார்கள் என்பதை அறிய மக்களுக்கு உரிமை உள்ளது. தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. தேர்தல் பத்திரத்தை அறிமுகம் செய்ய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், ஐடி சட்டத்தில் மேற்கொண்ட திருத்தங்கள் ரத்து செய்யப்படுகிறது. கருப்பு பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தை அடைய தேர்தல் பத்திரங்களை தவிர வேறு வழிகள் உள்ளன. குறைந்தபட்ச கட்டுப்பாடுகள் என்பது திருப்திகரமாக இல்லை.

அரசை கணக்கு கேட்கும் அரசை கணக்கு கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது என பல தருணங்களில் நீதிமன்றங்கள் கூறியுள்ளன. தேர்தல் பத்திர விவரங்களை வழங்காமல் இருப்பதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. எனவே தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது. தேர்தல் பத்திரம் வழங்குவதை வங்கிகள் உடனடியாக நிறுத்த வேண்டும். தற்போதைய விதிகளின் கீழ் உள்ள தேர்தல் பத்திர முறை சட்ட விரோதமாக உள்ளது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

மேலும்  அரசை கணக்கு கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது என பல தருணங்களில் நீதிமன்றங்கள் கூறியுள்ளன. தேர்தல் பத்திரம் மூலம் தாம் பெற்ற நன்கொடைகளை கொடுத்தவர்களுக்கே திருப்பி அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நன்கொடை கொடுத்த விவரங்களை தேர்தல் ஆணையம் மார்ச் 31ஆம் தேதிக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும். தேர்தல் பத்திரம் தொடர்பான சட்ட திருத்த மசோதாக்களும் ரத்து செய்யப்படுகிறது. தேர்தல் பத்திரங்களை வெளியிடுவதை உடனடியாக நிறுத்த எஸ்.பி.ஐ க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் முறைகேடு நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில் அதனை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.