தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தங்கள் கட்சியில் இருப்பவர்கள் மாற்றுக் கட்சியில் இணைவது அந்தந்த கட்சி வட்டாரங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது திமுக நிர்வாகிகள் பலர் ராஜினாமா செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது கோவை விளவகுறிச்சி ஒன்பதாவது வார்டில் திமுக வட்ட செயலாளராக இருப்பவர் மயில்சாமி. இவர் தற்போது தன்னுடைய கட்சி பதவியை ராஜினாமா செய்வதாக செந்தில் பாலாஜிக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார்.
இதேபோன்று 70க்கும் மேற்பட்டோர் ராஜினாமா செய்வதாக கடிதத்தை அனுப்பி உள்ளனர். அதாவது மயில்சாமியை வட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது அவரே தன்னுடைய ஆதரவாளர்களுடன் பதவி ஏராதனமா செய்வதாக கூறப்படுகிறது. மேலும் இது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
