“பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி, மாபெரும் நம்பிக்கை மோசடியை த.வெ.க அரசு செய்துள்ளது” என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, தற்போது வெறும் 50,000 ரூபாய் வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என அறிவித்திருப்பது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி என்று அவர் சாடியுள்ளார்.
பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு.
தேர்தல் பிரச்சாரத்தின் போது,
5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள்.ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு…
— Udhay – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@Udhaystalin) May 26, 2026
மேலும், ஏற்கனவே 200 யூனிட் வரை இலவச மின்சாரம் என்று கூறிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என அதிர்ச்சி கொடுத்ததையும் உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். “இப்போது பயிர்க்கடன் தள்ளுபடியிலும் மிகப்பெரிய ஸ்கேம் (SCAM) செய்கிறார்கள்; இப்படி இன்னும் எத்தனை ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவில் தயாராக இருக்க வேண்டும் CM சார்?” என த.வெ.க அரசை நோக்கி அவர் எழுப்பியுள்ள அடுக்கடுக்கான கேள்விகள் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
