
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் எந்தெந்த கட்சிகள் எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என பிரபல செய்தி நிறுவனமான டைம்ஸ் நவ் இடிஜி கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 39 இடங்களில் ஆளும் திமுக நேரடியாக 21 முதல் 22 இடங்களை பிடிக்கும், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் ஐந்து முதல் ஏழு இடங்களை பிடிக்கும் ,அதிமுக 1 முதல் மூன்று இடங்கள், பாஜக இரண்டு முதல் ஆறு இடங்கள் பெற வாய்ப்புள்ளதாக அந்த நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.