மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் தேர்தலில் வாக்களிக்க தேவைப்படும் ஆவணங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஆதார், வங்கி மற்றும் தபால் நிலைய பாஸ்புக், டிரைவிங் லைசன்ஸ், பான் கார்டு, இந்திய பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் அடையாள அட்டை, எம் பி/எம் எல் ஏ மற்றும் எம்எல்சிக்களின் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை கொண்டு வாக்களிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.