இந்தியாவில் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் மாதம் தோறும் தங்களது சம்பளத்தில் ஒரு பகுதியை EPFO கணக்கில் சேமிக்கின்றனர். இந்த கணக்கு வைத்திருக்கும் அனைவரும் EPFO ஆல் வகுக்கப்பட்டுள்ள சில விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இருந்தாலும் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு இந்த விதிகள் மாற்றப்படும். இத்தகைய மாற்றங்களை உறுப்பினர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

தற்போது பிஎப் உறுப்பினர்களுக்கு பெரிய நிவாரணம் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது கூட்டு அறிவிப்பு படிவத்தை நிரப்புவதிலிருந்து EPFO உறுப்பினர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 15000 ரூபாய்க்கு மேல் அடிப்படை சம்பளம் உள்ள ஊழியர்கள் பிஎப் கணக்கில் தங்களுடைய பங்கை பெற அவர்களது நிறுவனம் சார்பாக அல்லது முதலாளி கையொப்பமிட்ட கடிதத்தை EPFO க்கு சமர்ப்பிக்க வேண்டும். அப்போது இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.