திருமணமான கையோடு அழகான கனவுகளுடன் தேன்நிலவுக்குச் சென்ற இளம்பெண் ஒருவருக்கு, அவரது கணவனே நரகத்தைக் காட்டிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தேன்நிலவு கொண்டாட்டத்தின் போது, அந்த பெண்ணின் கணவன் தனது ஐந்து நண்பர்களை அறைக்கு வரவழைத்துள்ளார். அவர்கள் முன்னிலையிலேயே தனது மனைவியைக் கொடுமைப்படுத்தியது மட்டுமன்றி, அந்த ஐந்து பேரையும் தனது மனைவியுடன் உடலுறவு கொள்ள கட்டாயப்படுத்தி, அவர்களைத் தூண்டிவிட்டுள்ளார்.

மேலும் கணவனே மனைவியைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, மற்ற ஆண்களிடம் அவரை ஒரு போகப் பொருளாக ஒப்படைத்த இந்தச் செயல் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தனது கணவன் மற்றும் அவரது நண்பர்களின் பிடியில் இருந்து தப்பித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், பெண்ணின் கணவன் உட்பட சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு பெண்ணின் கண்ணியத்தைச் சிதைக்கும் வகையில் தேன்நிலவு அன்று நடந்த இத்தகைய வக்கிரமான செயல், நவீன சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்த பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.