லண்டனிலிருந்து நேபாளம் செல்லும் வழியில் மும்பை விமான நிலையத்தில் சுமார் 10 மணி நேரம் காத்திருந்த ஒரு பாகிஸ்தானியப் பெண்ணின் அனுபவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் கடவுச்சீட்டுடன் இந்தியாவிற்குள் நுழைவது குறித்து ஆரம்பத்தில் மிகுந்த அச்சத்தில் இருந்ததாகக் கூறும் அவர், மும்பை விமான நிலைய ஊழியர்களின் கனிவான உபசரிப்பு தன்னை வியப்பில் ஆழ்த்தியதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் பாதுகாப்புச் சோதனையின் போது தனது பையில் இருந்த பவர் பேங்க் தொடர்பாக அதிகாரிகள் தன்னை அணுகிய விதம் மிகவும் மரியாதையாக இருந்ததாகவும், ஒட்டுமொத்தமாக இந்தியர்களின் விருந்தோம்பல் தனது பயத்தைப் போக்கி மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Wanzipa (@wanzipa)

“>

இதனால் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விமான நிலையத்தில் தான் தங்கியிருந்த போது அங்கிருந்த உணவகங்களில் உணவு அருந்தியது மற்றும் மும்பையின் அழகை ரசித்தது போன்ற தருணங்களை அப்பெண் விவரித்துள்ளார்.

இந்நிலையில் சமூக வலைதளப் பயனர்கள் இவருக்கு அன்பான வரவேற்பு தெரிவித்து வருவதுடன், எல்லைகளுக்கு அப்பாற்பட்ட மனிதநேயத்திற்கு இது ஒரு சிறந்த உதாரணம் என்றும் பாராட்டி வருகின்றனர். அண்டை நாட்டுப் பெண்ணின் இந்த நேர்மறையான பதிவு, இரு நாட்டு மக்களிடையே நிலவும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.