ஜன்மாஷ்டமி என்றாலே தஹி ஹண்டி கொண்டாட்டம் தான் சிறப்பு. பொதுவாக மனிதர்கள் பிரமிட் போட்டு தொங்கும் ஹண்டியை உடைப்பது வழக்கம்.
ஆனால் இந்த முறை குஜராத் மாநிலம் சூரத்தில், அதுவும் தெருநாய்களுக்காகவே தனிச்சிறப்பு தஹி ஹண்டி நடத்தப்பட்டது. இதன் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி, மக்களின் மனதை கவர்ந்துள்ளது. நாய்கள் குதூகலத்தோடு குரைத்துக் கொண்டே சாப்பிடும் காட்சி அனைவரையும் கவர்ந்துவிட்டது.
View this post on Instagram
“>
இந்த தஹி ஹண்டியை விலங்கு மீட்பவர் த்ரிஷா ஜீவ்தயா ஏற்பாடு செய்தார். ஹண்டி, தயிர் இல்லாமல் நாய் உணவுகளால் நிரப்பப்பட்டது. ஹண்டி உடைந்தவுடன், தெருநாய்கள் மகிழ்ச்சியுடன் உணவை சுவைத்தன. அதோடு, சில நாய்களை கிருஷ்ணராக அலங்கரித்தது இன்னொரு சிறப்பாக இருந்தது. சிறிய கிரீடம், வண்ண ஆடைகள் அணிந்த அந்த “நாய் கிருஷ்ணா” காட்சிகள் நெட்டிசன்களை கவர்ந்தன.
View this post on Instagram
“>
இந்த முயற்சி தெருநாய்களின் உரிமைகள், பராமரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தான் என்று த்ரிஷா தெரிவித்துள்ளார். மேலும், டெல்லி–NCR பகுதிகளில் தெருநாய்களை அகற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான பேரணியிலும் தாம் பங்கேற்க இருப்பதாக கூறியுள்ளார்.
தற்போது “நாய் கிருஷ்ணா” தஹி ஹண்டி வீடியோ, இணையத்தில் ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்து பாராட்டும் நிலை உருவாகியுள்ளது.
