
ரயிலில் பயணிக்கும் போது தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்வது பயணிகளின் முக்கியக் கடமையாகும். இதை நினைவூட்டும் வகையில், ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) தற்போது ஒரு தனித்துவமான விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சி சமூக ஊடகங்களில் பெரிதும் பாராட்டப்படுகிறது. குறிப்பாக, RPF பகிர்ந்துள்ள ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், தூங்கிக் கொண்டிருந்த ஒரு பயணியின் மொபைலை RPF ஜவான் ஏமாற்றும் விதத்தில் எடுத்து வைத்து, பின்னர் பயணிக்கு அதைப் பற்றிய முக்கிய அறிவுறுத்தலை வழங்குகிறார்.
வீடியோவின் மையக் காட்சியில், மேல் இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு பயணியின் சட்டைப் பையில் இருந்து RPF போலீசாரில் ஒருவர் அவரது மொபைலை எடுத்து வைப்பது போன்ற காட்சி இடம்பெறுகிறது. பயணியை பின்னர் போலீசார் எழுப்பி, “உங்கள் போன் எங்கே?” எனக் கேட்கிறார். பயணி அதிர்ச்சி அடைந்து தனது மொபைலை தேடி அலைக்கிறார். பின்னர், அவருடைய மொபைல் மேலிருந்து எடுக்கப்பட்டதை போலீசாரே காட்டி, “இந்த மாதிரியான நிலைகளில் திருடர்கள் எளிதில் உங்கள் போன்களை எடுத்து விடலாம். எனவே, மொபைலை பேண்ட் பாக்கெட்டில் வைத்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்” என்று அறிவுறுத்துகிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வரும் நிலையில் பலரும் இந்த முயற்சியை பாராட்டி, இது போலிப் போலீசாரால் நடைபெறும் திருட்டுகளையும் பொதுமக்கள் தடுக்க உதவும் என தெரிவித்துள்ளனர். குறிப்பாக, “மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக நன்றி”, “மிகச் சிறந்த நடவடிக்கை”, “மோட்டா பாய் இந்த சத்தத்திலும் தூங்கிட்டாரே!” போன்ற கருத்துகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. மேலும் RPF-இன் இந்த செயல், பாதுகாப்பு அறிவுறுத்தல்களை காமெடிக் ஸ்டைலில் செய்து பயணிகளுக்கு நேரடி அனுபவம் அளிப்பது என்கிறது.
View this post on Instagram