துலாம் ராசி அன்பர்களே,

இன்று பொதுநல சிந்தனையுடன் செயல்படும் சூழல் உள்ளது. முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும். பணவரவு நன்மையை ஏற்படுத்தும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுவர திட்டம் தீட்டுவீர்கள். வியாபாரம் தொடர்பான அலைச்சல் ஏற்படலாம்.

குடும்பத்தில் வெகு நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். பண வரவுகளில் இருந்த தடைகள் விலகும். கடன் பிரச்சனைகள் படிப்படியாக குறையும். நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பேசுவதில் நிதானத்தை பின்பற்றுங்கள். இன்று பெண்கள் குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்வீர்கள். குடும்ப உறவுகள் பலப்படும். கற்பனை உலகில் மிதப்பீர்கள்.

இன்று மாணவர்கள் துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பீர்கள். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: 2, 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்