கன்னி ராசி அன்பர்களே,

இன்று மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி பெறும் நாளாக இருக்கும். ஒரு சிலர் செய்வது ஒன்றும் சொல்வதும் ஒன்றாக இருக்கும். அதை நினைத்து வருத்தப்பட வேண்டாம். பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள். வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு பக்கம் இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணியை முடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைப்பதில். தாமத நிலை ஏற்பட்டாலும் கண்டிப்பாக கிடைக்கும். தன்னம்பிக்கை மட்டும் இழந்து விட வேண்டாம். தைரியமாக எந்த செயலிலும் ஈடுபட பாருங்கள்.

பெண்கள் இன்று சுய கட்டுப்பாடுடன் காணப்படுவீர்கள். எதை செய்தாலும் எச்சரிக்கையுடன் செய்வீர்கள். மனதை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வீர்கள். இன்று மாணவர்களுக்கு படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம் இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: மூன்று மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன் மற்றும் ஆரஞ்சு நிறம்