சிம்மம் ராசி அன்பர்களே,

இன்று சுயநலம் கருதாமல் மற்றவருக்கு உதவிகள் செய்யக்கூடிய மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். அவமதித்து பேசியவர்கள் அன்பு பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் குறுக்கீடுகள் விலகி செல்லும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேறும். புதிய நட்பு கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். மங்களகரமான சுப காரியங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். இனிய பயணங்களால் ஆனந்தமடைவீர்கள். கருத்துக்களை பரிமாறும் போது கவனமாக இருங்கள்.

இன்று பெண்களுக்கு மன மகிழ்ச்சி ஏற்படும். காரியங்கள் சுறுசுறுப்பாக நடக்கும். இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும். நம்பிக்கையுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முழு கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். கலை துறையில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்