கடகம் ராசி அன்பர்களே,

இன்று செயலில் புதிய உத்வேகம் பிறக்கும் நாள் என்று சொல்ல முடியும். புதிய திருப்பங்கள் ஏற்படக்கூடும். உண்மை நிலவரம் உணர்ந்து பணி புரிவது நல்லது. தொழில் வியாபாரம் சுமாரான அளவில் தான் இருக்கும். வரவுகளை விட செலவுகள் அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

எதிர்ப்பாராத பண வரவுகளால் வாழ்க்கை தரம் உயரும். நல்ல மனதுடைய உங்களுக்கு நல்லதே நடக்கும். இன்று நீங்கள் தொலைத்த பொருள் கைக்கு வந்து சேரும். பெண்களுக்கு தாய் வீட்டு சீதனம் கிடைக்க பெறும். மகிழ்ச்சி மிக்க நாளாக இன்றைய தினத்தை அமைத்துக் கொள்வீர்கள். திட்டமிட்டதை விட வேகமாக பணிகளை முடிப்பீர்கள்.

இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்பாக இருப்பீர்கள். குடும்ப கஷ்டங்களை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். இலட்சிய நோக்குடன் கல்வியை அமைத்துக் கொள்வீர்கள். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்