மிதுனம் ராசி அன்பர்களே,

இன்று மனதில் இனம் புரியாத வருத்தம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சிந்தித்து எந்த காரியத்திலும் ஈடுபட வேண்டும். நண்பரின் ஆலோசனை நல்வழியை காட்டும். எதிர்பார்த்த பணவரவு கண்டிப்பாக கிடைக்கும். பயன் தராத பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம்.

எதிலும் கவனமாக ஈடுபடுவது நல்லது. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். பெண்கள் இல்லத்தை அற்புதமாக வழி நடத்துவீர்கள். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். காரியங்கள் சுறுசுறுப்பாக நடக்கும். இன்னல்கள் தீர்ந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். தன்னம்பிக்கையை மட்டும் விட்டு விட வேண்டாம்.

இன்று மாணவர்கள் தந்தையிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். யாரிடமும் முன் கோபம் பட வேண்டாம். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: இரண்டு ஐந்து மற்றும் ஏழு

அதிஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்