
பணம் செலுத்திய பின்னரே துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியிடப்படும் என இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.
ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பெற்ற ரூபாய் 2.40 கோடி திரும்ப செலுத்தப்பட்ட பின்னரே துருவ நட்சத்திரம் படம் வெளியிடப்படும் என கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பு பதிலை எடுத்து வழக்கை திங்கள் அன்று ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பெற்ற ரூபாய் 2.40 கோடி பணம் திங்கள் அல்லது புதன்கிழமைக்குள் திரும்ப தரப்படும் என கௌதம் வாசுமேனன் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட ஆல் இன் பிக்சர்ஸ் தடை கோரிய வழக்கில் ஹைகோர்ட்டில் கௌதம் வாசுதேவ் மேனன் உறுதியளித்துள்ளார். பணத்தை திரும்ப செலுத்தவில்லை என்பதால் இன்று படத்தை வெளியிடவில்லை என தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக நடிகர் சிம்புவை வைத்து படம் எடுப்பதாக ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய முன் தொகையை இன்று காலை, அதாவது நாம் 24 ஆம் தேதி 10:30 மணிக்குள் கௌதம் வாசுதேவ் மேனன் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு பணத்தை கொடுக்காவிட்டால் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. ஆனால் கௌதம் வாசுதேவ் மேனன் இன்று பணத்தை கொடுக்கவில்லை. எனவே இன்றைக்கு வெளியாக இருந்த படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை.