
தமிழக துணை முதலமைச்சராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் 4ஆம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு உதயநிதிக்கு பதவி உயர்வு அளிக்க திமுக ஏற்கனவே முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த போது இதனை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு இனி இரண்டு ஆண்டுகளே மீதமுள்ள நிலையில், கட்சியினரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் அதற்காக திமுக தலைமை திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், திமுக சார்பில் மத்திய அமைச்சரவையில் யார் யாரை களமிறக்குவது என்பது குறித்தும் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியலை தயார் செய்வதாகவும் கூறப்படுகிறது.