சமூக ஊடகங்களில் தற்போது பரபரப்பாக வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ஒரு இளைஞர் பைக் ஓட்டுவது காணப்படுகிறது. ஆனால் அது சாதாரண பைக் ரைடு அல்ல — பைக்கின் சீட்டில் ஒரு பெரிய முதலையை கட்டி வைத்துள்ள நிலையில், அந்த முதலையின் மீது அமர்ந்தபடி அவர் பைக் ஓட்டுகிறார். அந்த வீடியோவில், மிகப் பெரிய முதலையின்  மீது அமர்ந்து எந்த பயமோ, தயக்கமோ இல்லாமல் பைக் ஓட்டும் அந்த இளைஞர், இதை ஒரு சாதாரண சாகசமாகவே நடத்துகிறார்.

 

இந்த வீடியோவை சமூக ஊடக தளம் X  @Mv__Rebel என்ற பயனர் பகிர்ந்துள்ளார். இதுவரை ஆயிரக்கணக்கானோர் அந்த வீடியோவைப் பார்த்து விருப்பம் தெரிவித்துள்ளனர். வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்து பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.
ஒருவர், “பைக் எஞ்சின் திடீரென நிறுத்தப்பட்டால், முதலை அதைத் தானே ஓட்டிவிடும் போல இருக்கிறது!” என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

மற்றொருவர், “அடுத்த முறை ஏனைய விலங்குகளைப் பயன்படுத்திப் பைக் ஓட்டிப் பாருங்கள்!” என எழுதியுள்ளார். “இதைப் பார்த்தாலே என் இதயம் துடிக்கிறது!” என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இது உண்மையான வீடியோவா என பலர் சந்தேகம் கிளப்பும் நிலையில் இது பழைய வீடியோ என்றும் தற்போது சமூக வலைதளத்தில் மீண்டும் வைரல் ஆகிறது என்றும் கூறப்படுகிறது.