சமூக ஊடகங்களில் ஒரு பெண் பகிர்ந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், “பாராசிட்டமால் மாத்திரைகளைப் பயன்படுத்தி துணிகளைத் துவைத்தால், கறைகள் எளிதில் நீங்கும்” என அவர் கூறியுள்ளார். அந்த வீடியோவில், ஒரு வாளி தண்ணீரில் பாராசிட்டமால் மாத்திரையை சேர்த்தால், சோப்பு அல்லது ஷர்ப் தேவையில்லாமல் துணிகள் பளபளப்பாக மாறும் என்று அவர் விளக்குகிறார். இதன் மூலம் அழுக்குகள் மற்றும் மஞ்சள் நிறம் கொண்ட துணிகளும் எளிதில் சுத்தமாகும் எனவும் கூறப்படுகிறது.
இந்த காணொளியை @acharyaveda என்ற பயனர் சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளார். “வெள்ளை ஆடைகளில் உள்ள அழுக்குகளை அகற்றுவதற்கான எளிய வழி” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ, சில மணி நேரங்களுக்குள் வைரலானது. இதுவரை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதைப் பார்த்துள்ளனர்.
सफ़ेद कपडे से मैल हटाने का सबसे आसान तरीका… pic.twitter.com/vQn2Ijhq4T
— 𝗩𝗲𝗱𝗮𝗰𝗵𝗮𝗿𝘆𝗮 (@acharyaveda_) October 5, 2025
மேலும் இந்த வீடியோ ஆயிரக்கணக்கான விருப்பங்கள், பகிர்வுகள் மற்றும் கருத்துகளுடன் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. சிலர் இதை புதுமையான யோசனை என பாராட்டியுள்ளனர்க, அதேசமயம் பலர் இதன் நம்பகத்தன்மையை சந்தேகித்தும் வருகின்றனர்.
