நாட்டில் மிக நீண்ட  தில்லி-மும்பை  விரைவுச் சாலையின் 246 கிலோ மீட்டர் வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்து விரைவுச் சாலை பயண நேரத்தை பாதியாக குறையும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. 1,386 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட நாட்டின் மிக நீளமான விரைவுச்சாலை தில்லி மற்றும் மும்பையை இணைக்கும்.

தில்லி-மும்பை விரைவுச் சாலை திட்டத்தின் கீழ் 1,386 கிலோ மீட்டர்  நீளமுள்ள நாட்டின் மிக நீளமான விரைவுச் சாலையாக இருக்கும். இதற்குரிய மொத்த செலவு தோராயமாக ரூபாய்.1 லட்சம் கோடி. அதோடு  விரைவுச்சாலை திட்டம் முழுமையாக முடிந்ததும் தில்லி-மும்பை பயணம் நேரம் 24 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக (50 சதவீதமாக) குறையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.