மகாராஷ்டிரா, ஆந்திரா உட்பட 12 மாநிலங்களில் ஆளுநர்களையும், லடாக் யூனியன் பிரதேசத்துக்கான புது துணைநிலை ஆளுநரையும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று நியமனம் செய்தார். இந்திய வரலாற்றிலேயே ஒரே மாநிலத்தை சேர்ந்த 3 பேர், ஒரே நேரத்தில் ஆளுநராக இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

அதாவது, தமிழ்நாட்டை சேர்ந்த தமிழிசை, இல.கணேசன், சி.பி.ஆர் ஆகியோர் ஆளுநராக இருக்கிறார்கள். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகால வரலாற்றில் இதுபோன்ற ஒரு நிகழ்வு இதுவரை நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் எப்படியாவது காலூன்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜக மேலிடம் தமிழக தலைவர்களை ஆளுநராக நியமிப்பதாக கூறப்படுகிறது.