ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் லக்னோ -மும்பை அணிகள் மோதின. இதில் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.  திலக் வர்மா (25 ரன், 23 பந்து, இரண்டு பவுண்டரி) என தொடர்ந்து தடுமாறியதால் அவரை பத்தொன்பதாவது ஓவரில் ரிட்டையர்டு அவுட் முறையில் மும்பை நிர்வாகம் வெளியேற்றியது. அவருக்கு பதிலாக  மிட்செல் சாண்ட்னரை இறக்கியது. இருப்பினும் மும்பை அணியால் வெற்றி பெற முடியவில்லை. இந்த விவகாரம் தான் தற்போது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது .

அதாவது இந்திய டி20 கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத வீரராக ஆடிவரும் திலக் வர்மாவை ரிட்டையர்டு அவுட் ஆக்கி மும்பை வெளியேற்றியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் திலக் வர்மாவை விட மிட்செல் சாண்ட்னர்  ஹிட்டரா? என்று முன்னாள் வீரர் ஹர்பஜன்சிங் மும்பை நிர்வாகத்தை கடுமையாக சாடியுள்ளார்.   திலக் வர்மாவைரிட்டையர்டு அவுட் ஆக்கியது என் கருத்துப்படி தவறு. அல்லது வேறு ஏதேனும் திறமை மிக்க ஹிட்டரை இறக்கியிருந்தால்  எனக்கு புரிந்திருக்கும். நான் இதை ஏற்கவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.