‘காந்தாரா’ திரைப்படத்தின் மூலம் பெரும் பிரபலமடைந்த நடிகர் பிரபாகர் கல்யாணி, வீட்டில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர், இன்று காலை உடனடி மருத்துவ உதவி அளிக்கப்பட்டபோதும் உயிரிழந்தார். திரைப்படத்துடன் மேடை நாடகங்களிலும் மக்களை கவர்ந்த பிரபாகர், தனது இயல்பான நடிப்பால் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார். இதற்கு முன்னர் ‘காந்தாரா 1’ படத்தில் நடித்த மூன்று நடிகர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இப்போது பிரபாகரின் மரணமும் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
