மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி சமீப காலமாக மோடி வாக்கு பெறுவதில் ஊழல் செய்துதான் பிரதமர் ஆகியுள்ளார் என்று குற்றமசாட்டி வருகிறார். அதற்கான ஆதாரமும் தன்னிடம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் வாக்கு திருட்டு தொடர்பான ராகுல் காந்தியின் வீடியோவை பகிர்ந்து பிரதமர் மோடிக்கு கேள்வி ஒன்றை எழுதியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ஒவ்வொரு தேசபக்தரான இந்தியரும் இதை பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. நமது குரல் திருடப்பட்டுள்ளது. இது மிக தீவிர குற்ற செயலாகும். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இவற்றை ஆதாரத்துடன் முன் வைத்துள்ளார். முதன்முறை என்ற போதிலும் இம்முறை பிரதமர் ஆகிய நீங்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி விளக்கம் அளிப்பீர்களா?. நாடு தெரிந்து கொள்ள விரும்புகிறது என்று பதிவேட்டுள்ளார். இது தொடர்பான பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.