ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த நடன மாணவியான பவ்யா ஹாஸினி என்ற 25 வயது இளம் பெண் உலக நன்மைக்காக திருவண்ணாமலை கிரிவலம் பாதையில் நடனமாடியுள்ளார். திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பௌர்ணமி நாட்களில் அந்த மலையைச் சுற்றி கிரிவலப் பாதையில் பக்தர்கள் பலம் வந்து வழிபடுவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பரதநாட்டியம் கற்றுள்ள பவ்ய ஹாசினி என்ற மாணவி அருணாச்சலேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்திற்கு வழிபாடு செய்து நடனம் ஆடியபடி கிரிவலம் சென்றுள்ளார். அப்போது மழையும் லேசாக பெய்ய ஆரம்பித்த நிலையில் அவர் எதையும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து 14 கிலோ மீட்டர் நடனம் ஆடிக்கொண்டே கோவில் முன்பு வந்து தனது கிரிவலத்தை முடித்தார். உலகின் நன்மைக்காக இந்த இளம் பெண் கிரிவலத்தை ஆரம்பித்துள்ளார். இவரின் பக்தியையும் நடனத்தையும் கண்டு பலரும் வாழ்த்து தெரிவித்ததோடு பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.