தங்கள் திருமண நாளில் நான்கு வயது மகனை பறிகொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மணலி பகுதியில் திருமண நாளை கொண்டாடுவதற்கு சேகர் -கோகிலா தம்பதியினர் நான்கு வயது மகன் நிஷாந்த் உடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது டிப்பர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் பலத்த காயம் அடைந்த சேகர் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து லாரி ஓட்டுனர் ஸ்ரீதரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
