நேபாளத்தில் திருமண வீட்டாருடன் சென்ற பேருந்து ஒன்று மலைப்பாதையில் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தில் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

திருமணக் கொண்டாட்டங்களுக்காக உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சென்ற அந்தப் பேருந்து, இலக்கை அடைவதற்கு முன்னதாகவே விபத்தில் சிக்கியதால் மகிழ்ச்சியாகத் தொடங்கிய அந்தப் பயணம் பெரும் சோகத்தில் முடிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் மக்கள், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர்.

“>

இந்நிலையில் விபத்து நடந்த பகுதியில் சாலை மிகதிருமணப் பயணத்தில் நேரிட்ட துயரம்வும் குறுகலாகவும், வளைவுகள் நிறைந்ததாகவும் இருந்ததே இந்த விபத்திற்கு முக்கியக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. திருமணக் கோலத்தில் இருந்த குடும்பத்தினரிடையே இந்த மரணச் செய்தி பெரும் அதிர்ச்சியையும் மீளாத் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.