
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சேத்துப்பட்டு அருகே நெடுங்குணம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 24 வயது இளம்பெண்ணுக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்த நிலையில் சென்னையில் உள்ள வண்டலூர் பகுதியில் சேர்ந்த ஒரு வாலிபர் குடும்பத்துடன் வந்து அவர்களிடம் பெண் கேட்க பெண்ணின் குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். இதைத்தொடர்ந்து அதே கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கும் அந்த இளம் பெண்ணுக்கும் இடையே திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்து பத்திரிகைகள் அடித்தனர். இவர்களுக்கு கடந்த 12ஆம் தேதி வெகுவி விமர்சையாக திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று முன் தினம் ஏற்கனவே பெண் பார்த்துவிட்டு சென்ற அந்த வண்டலூர் வாலிபர் திருமணமான பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் அந்த பெண்ணிடம் தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்.
உடனே அந்த புது பெண் தன் கணவர் கட்டிய தாலியை கழற்றி வீசிவிட்டு அந்த வாலிபருடன் சென்றுவிட்டார். திருமணம் ஆகி 4 நாட்களில் கணவன் கட்டிய தாலியை கழற்றி வீசிவிட்டு அந்த பெண் வாலிபருடன் சென்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணத்திற்கு முன்பாகவே திருமணம் வேண்டாம் என்று பெற்றோரிடம் தெளிவாக கூறி திருமணத்தை நிறுத்தி இருக்கலாம். இல்லையெனில் திருமணம் நடைபெறும் போதாவது உறவினர்கள் முன்பாக திருமணம் வேண்டாம் என்று கூறி இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு திருமணமாகி 4 நாட்களில் தாலியை கழற்றிவிட்டு புதுப்பெண் வாலிபருடன் ஓடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.