சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அனுப்பியது சட்டப்பேரவை செயலகம். ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். 6 மாதத்திற்கு உள்ளாக இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும்.