தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் இறுதியாக குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இனி வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று அஜித் கூறியுள்ளார். அதாவது தற்போது கார் ரேஸில் நடிகர் அஜித் கலந்து கொண்டு வருகிறார். வெளிநாடுகளில் நடைபெறும் கார் ரேஸில் கலந்துகொண்டு வரும் அஜித் குமார் விளையாட்டுப் போட்டிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

 

அந்த வகையில் தற்போது திருப்பூரில் உள்ள கொங்குநாடு ரைபிள் கிளப்பில் நடிகர் அஜித்குமார் துப்பாக்கி பயிற்சி எடுப்பது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகர் அஜித் நாளை புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு தன்னுடைய ரசிகர்களுக்கும் வாழ்த்து கூறியுள்ளார். இந்த வாழ்த்து பதிவு அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.