திருமலை திருப்பதி தேவஸ்தானமானது மாதந்தோறும் இணையதளம் மூலம் அனைத்து தரிசன டிக்கெட்டுகளையும் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் மார்ச் மாதத்துக்கான மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், நாள்பட்ட நோயால் அவதியுறுபவர்களுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் நாளை (பிப்,.23) ஆம்  தேதி காலை 9:00 மணிக்கு வெளியிடப்பட இருக்கிறது. தேவஸ்தான இணையதளமான tirupatibalaji.ap.gov.in வாயிலாக டிக்கெட்டுகளை இலவசமாக முன் பதிவு செய்துக்கொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானமானது தெரிவித்துள்ளது.